திங்கள், 22 அக்டோபர், 2018

வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்

வணக்கம்.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7வது நட்சத்திரமாக வந்தால் அதை வதம் எனவும்,அந்த ஆண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால் அதே பெண் நட்சத்திரம்22வரும் அது வைநாசிகம்   நட்சத்திரம் என்று திருமணப் பொருத்தம்  பார்க்கும் போது சொல்வார்கள்.௨தாரணமாக பெண் நட்சத்திரம் அஸ்வினி என்றால் அதற்கு 7வது நட்சத்திரம் வதம் என்ற புனர்பூசம் நட்சத்திரமாகும்.அந்த ஆண் நட்சத்திரம் புனர்பூசத்தில் இருந்து 22வது வைநாசிகம் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் வரும்.எனவே வதவை நாசிக நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது .
வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்:
1.ரோகிணி-- பூரட்டாதி
2.பூசம் -பரணி
3.மகம்-- ரோகிணி
4.உத்திரம்-- திருவாதிரை
5.அஸ்தம்- புனர்பூசம்
6.சித்திரை-- பூசம்
7.அனுஷம் --பூரம்
8.உத்திராடம்-- சுவாதி
9.பூரட்டாதி --மூலம்
10.உத்திரட்டாதி-- பூராடம்
11.ரேவதி-- உத்திராடம்
மேலே கண்ட நட்சத்திரங்களில் ஆண்அல்லது பெண் நட்சத்திரங்கள் வந்தால் 22வது நட்சத்திரத்தில் வரும் வதவை நாசிக தோசமில்லை.
                                      நன்றி.

1 கருத்து:

  1. இந்த நட்சத்திரங்களுக்கு வதவைநாசிக தோஷமில்லை என்பதற்கு மூல நூல் ஆதாரம் ஏதேனும் இருப்பின் அதையும் பதிவிட்டால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    நன்றி.
    குரு இராமானந்தம்.

    பதிலளிநீக்கு

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...