வெண்டிக்காய் மண்டி.

தேவையான பொருட்கள்:

வெண்டிக்காய்-1/4 கிலோ.
வெங்காயம்-100கிராம்.
பச்சை மிளகாய்-7.
பூண்டு-1.
புளி-சிறிதளவு.
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:

வெண்டிக்காயை துண்டுகளாக்கி கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை உரித்து நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெண்டிக்காயை நன்றாக வதக்கவும்.அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி அரிசி களைந்த தண்ணீரில் வேகவிடவும்.வெண்டிக்காயை அரை வேக்காட்டில் இருக்கும் போதே உப்பு ,புளியை கரைத்து சேர்க்கவும்.நன்றாக வெந்த பிறகு கடுகு,உழுந்தம்பருப்பு, தாளித்து இறக்கவும்.வெண்டிக்காய் மண்டி தயார்.

       நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...