இராவணனும்,கும்பகர்ணனும் உலகையே வெல்லக்கூடிய பெருவலிவைப் பெற்று தங்கு தடையில்லாமல் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தால் பிரம்மாவை நோக்கித் தவம் செய்தார்கள்.விபீஷணன் பிரம்மாவிடத்தில் வரம் எதையும் கேட்கவில்லை.தம் எதிரில் காட்சி யளித்த பிரம்மாவினிடத்தில் எதையோ கேட்க விரும்பி,தவறுதலாக வேறு எதையோ கேட்டுக் கும்பகர்ணன் நித்திரை வரத்தைப் பெற்றான்.சகல தேவதைகளிடமிருந்தும்,ராட்சஷர்களிடமிருந்தும் தனக்கு அழிவு வரக்கூடாது,தோல்வி ஏற்படக்கூடாது என்று வேண்டி இராவணனன் அதைப்போலவே வரம் பெற்றான்.ஆனாலும் விரும்பியது போலத் தோல்வி மரணம் இவைகளிலிருந்து அவன் தப்பமுடியவில்லை.மனித உருவில் உதித்து வந்த ஆண்டவனின் கைகளால் அவன் மரணமெய்தினான்.ஆனால் விபீஷணனோ பிரம்மதேவனிடம் தனது லெளகீக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைஞ்சவில்லை.ஆண்டவனிடத்தில் பக்தியையும்,அறநெறியில் ஆழ்ந்த ஈடுபாட்டையும் மட்டுமே தனக்கு அருளுமாறு வேண்டிக் கொண்டான்.இவ்வாறாக எவ்வித சுயநலவிருப்பமில்லாத விபீஷணனுடைய மனப்பான்மையைக் கண்டு பிரம்மா மிகவும் மகிழ்ந்தார்.மற்ற இருவருக்கும் கிட்டாத பெரும் பாக்கியம் விபீஷணனுக்குக் கிடைத்தது."இந்த உலகில் நீ சிரஞ்சீவியாகப் பெருமையடைவாயாக"என்று பிரம்மா அருளாசி வழங்கினார்.இராவணனும்,கும்பகர்ணனும் அடையமுடிபாமற் போன மரணத்தின் மீதான வெற்றி அதை விரும்பாத விபீஷணனுக்குத் தானாகவே கிடைத்தது.அதுபோல அசையை அறுத்த ஞானி தான் விரும்பாவிட்டாலும் எல்லா யோகங்களையும் அநாயாசகமாகப்பெருகிறான்.இவ்வாறாக இறைவனைக்கண்ட ஞானிபோகப் பொருட்களின் மீதான ஆசைகளுக்கப்பாற்பட்ட மகிழ்ச்சி நிரம்பிய,அமைதியான நிர்மலமான வாழ்க்கையை வாழ்கிறான்.இதைக்தான் பிரம்ம நிலை என்கிறோம்.நல்ல காரியங்களைச் செய்து மன தூய்மையைகளைப் பெற்று ,தியானம்,ஆத்மதரிசனம் மூலமாக இந்த பிரம்ம நிலையை அடையலாம்.
புதன், 28 ஆகஸ்ட், 2019
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்
ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...
-
வணக்கம்.கரணங்களின் அதி தேவதை 1.பவம்-- இந்திரன். 2.பாலவம்--பிரம்மா. 3.கெளலவம்-- சூரியன். 4.தைதுலம் --ஆதித்தியன். 5.கரசை --பூமி. 6.வணி...
-
வணக்கம். பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7வது நட்சத்திரமாக வந்தால் அதை வதம் எனவும்,அந்த ஆண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக