புதன், 28 ஆகஸ்ட், 2019

பிரம்மநிலை.

இராவணனும்,கும்பகர்ணனும் உலகையே வெல்லக்கூடிய பெருவலிவைப் பெற்று தங்கு தடையில்லாமல் தங்கள் இச்சைப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற விருப்பத்தால் பிரம்மாவை நோக்கித் தவம் செய்தார்கள்.விபீஷணன் பிரம்மாவிடத்தில் வரம் எதையும் கேட்கவில்லை.தம் எதிரில் காட்சி யளித்த பிரம்மாவினிடத்தில் எதையோ கேட்க விரும்பி,தவறுதலாக வேறு எதையோ கேட்டுக் கும்பகர்ணன் நித்திரை வரத்தைப் பெற்றான்.சகல தேவதைகளிடமிருந்தும்,ராட்சஷர்களிடமிருந்தும் தனக்கு அழிவு வரக்கூடாது,தோல்வி ஏற்படக்கூடாது என்று வேண்டி இராவணனன் அதைப்போலவே வரம் பெற்றான்.ஆனாலும் விரும்பியது போலத் தோல்வி மரணம் இவைகளிலிருந்து அவன் தப்பமுடியவில்லை.மனித உருவில் உதித்து வந்த ஆண்டவனின் கைகளால் அவன் மரணமெய்தினான்.ஆனால் விபீஷணனோ பிரம்மதேவனிடம் தனது லெளகீக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இறைஞ்சவில்லை.ஆண்டவனிடத்தில் பக்தியையும்,அறநெறியில் ஆழ்ந்த ஈடுபாட்டையும் மட்டுமே தனக்கு அருளுமாறு வேண்டிக் கொண்டான்.இவ்வாறாக எவ்வித சுயநலவிருப்பமில்லாத விபீஷணனுடைய மனப்பான்மையைக் கண்டு பிரம்மா மிகவும் மகிழ்ந்தார்.மற்ற இருவருக்கும் கிட்டாத பெரும் பாக்கியம் விபீஷணனுக்குக் கிடைத்தது."இந்த உலகில் நீ சிரஞ்சீவியாகப் பெருமையடைவாயாக"என்று பிரம்மா அருளாசி வழங்கினார்.இராவணனும்,கும்பகர்ணனும் அடையமுடிபாமற் போன மரணத்தின் மீதான வெற்றி அதை விரும்பாத விபீஷணனுக்குத் தானாகவே கிடைத்தது.அதுபோல அசையை அறுத்த ஞானி தான் விரும்பாவிட்டாலும் எல்லா யோகங்களையும் அநாயாசகமாகப்பெருகிறான்.இவ்வாறாக இறைவனைக்கண்ட ஞானிபோகப் பொருட்களின் மீதான ஆசைகளுக்கப்பாற்பட்ட மகிழ்ச்சி நிரம்பிய,அமைதியான நிர்மலமான வாழ்க்கையை வாழ்கிறான்.இதைக்தான் பிரம்ம நிலை என்கிறோம்.நல்ல காரியங்களைச் செய்து மன தூய்மையைகளைப் பெற்று ,தியானம்,ஆத்மதரிசனம் மூலமாக இந்த பிரம்ம நிலையை அடையலாம்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

இராசிகளில் காலபுருஷனின் உடல்உறுப்புக்கள்.

மேஷ இராசி :           தலை,மனம்,மூளை.

ரிஷப இராசி                                                                                                 வலதுகண்,மூக்கு,நாக்கு,பற்கள்,காதுகள்,விரல்கள்,நகங்கள்,எலும்புகள்,தசைகள்

மிதுன இராசி: கழுத்து,தொடை,கைகள்,சுவாசம்.

கடக இராசி: இருதயம்,நுரையீரல்கள்,ரத்தம்.

சிம்ம இராசி:

மண்ணீரல்,குடல்,அடிவயிற்றின் மேல் பகுதி.

கன்னி இராசி: தொப்பூழ்,அடிவயிற்றின் கீழ் பகுதி,சிறுநீரகம்.

துலாம் இராசி:

கருப்பைக்குழாய்,விந்து,ஆண்,பெண் பால் உறுப்புக்கள்.

விருச்சிகம்:

பிறப்பு உறுப்புக்கள்,மூத்திரம்,கொப்பளங்கள்.

தனுசு இராசி:

இருதயத்தில் இருந்து குருதியிக்கு செல்லும் குருதிக் குழாய். கைகால்கள், தொடை கள்.

மகர இராசி:

முழங்கால்கள்,தசை,எலும்புகள்.

கும்ப இராசி:

இடது காது,சுவாசம்,முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையிலான பகுதி.

மீன இராசி:

இரத்தம்,இடது கண்,பாதங்கள்.


சனி, 27 ஜூலை, 2019

சர இராசிகளில் உள்ள நட்சத்திரங்களால் ஆளப்படும் உறுப்புக்கள்.

சரஇராசிகள்.

1.மேசம்.
2.கடகம்.
3.துலாம்.
சர ராசியில் உள்ள நட்சத்திரங்கள்
1.மேச இராசி.                                                                                                                                         1.அஸ்வினி
 2.பரணி    
 3.கார்த்திகை1ஆம் பாதம்.                                                                                         1.அஸ்வினி நட்சத்திரம்.
தலை,மூளை,கபாலம்,
2. பரணி நட்சத்திரம்.
தலை, மூளை, கபாலம், தலையில் உள்ள உறுப்புக்கள்,கண்கள்.
3. கார்த்திகை 1 ஆம் பாதம்.
தலை, கண்களின் பார்வைகள்.
2.கடகம் இராசி.
1.புனர்பூசம்.4ஆம் பாதம்.
2.பூசம்.
3.ஆயில்யம்.
1.புனர்பூசம் 4ஆம் பாதம்.
நெஞ்சு,வயிறு,சுவாச மண்டலம்,நுரையீரல்,கணையம்.
2. பூசம்.
நுரையீரல், விலா எலும்புகள்.
3.ஆயில்யம்.
உணவுக் குழாய்,ஈரலுக்கும் குடலுக்கும் இடையில் உள்ள சவ்வு.
3.துலாம் இராசி.
1.சித்திரை3,4ஆம் பாதம்.
2.சுவாதி.
3. விசாகம்1,2,3 ஆம் பாதம்.
1.சித்திரை3, 4 ஆம் பாதம்.
சிறுநீரகங்கள்,இடுப்புின் கீழ் பகுதி.
2.சுவாதி.
மூத்திரப்பை,தோல்,மூத்திரக்குழாய்.
3.விசாகம்1,2,3ஆம் பாதங்கள்
மூத்திரப்பையின் அருகில் உள்ள உறுப்புக்கள்,அடி வயிற்றின் கீழ் பகுதி.


8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.

உங்களுடைய பிறந்த தேதி 8,17,26 என்றால் நீங்கள் பயன்படுத்தும் ஆடைகளில் சாம்பல் நிறம் அதிகமாக இருப்பது போல தேர்ந்தெடுக்கவும்.
உங்களுடைய பிறந்த தேதி
8,
1+7=8,
2+6=8
எட்டாம் எண் ஆதிக்கத்தில் இருந்து
உங்கள் விதி எண் (பிறந்த தேதி+பிறந்த மாதம் +வருடம் இவற்றைக் கூட்டி ஒற்றை இலக்க எண்ணாக மாற்றி வரும் எண்) 1,2,3,4,5,6,7,8,9 ஆக இருந்தால் வண்ணங்கள் மாறுபடும்.
பிறந்த எண்-&விதி எண்.
8&1
8&2
8&3
8&4
8&5
8&6
8&7
8&8
8&9
8&1 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்
மஞ்சள்,நீலம்.
8&2 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்
மஞ்சள்,பச்சை,நீலம்.
8&3 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம், கத்திரிப்பூ வண்ணம்.
8&4 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம்.
8&5 எண்களில் பிறந்தவர்களின்
அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம், சாம்பல்.
8&6 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், பச்சை, நீலம்.
8&7 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், பச்சை, நீலம்.
8&8 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள், நீலம்.
8&9 எண்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான வண்ணங்கள்.
மஞ்சள். நீலம்.

வெள்ளி, 26 ஜூலை, 2019

உறுப்புக்களை காத்திடும் கனிகள்,

உறுப்புக்களை காத்திடும் கனிகள்.

உறுப்புக்கள்--கனிகள்.

1. கண்கள்- திராட்சைப் பழம்.
2. கன்னங்கள்-மாம்பழம்.
3. முகம்--தக்காளி.
4. இதயம்-- சாத்துக்குடி.
5.நுரையீரல்--மாதுளம் பழம்.
6.கணையம்--நாவல் பழம்.
7.கல்லீரல்--எலுமிச்சை.
8.மூளை--ஆப்பிள்.
9.இடுப்பு--இலந்தைப் பழம்.
10.இரத்தம்--நெல்லி.
11.மூக்கு--முந்திரிப்பழம்
12.தோல்--பேரீச்சம் பழம்.
13.முதுகு தண்டுவடம்-பப்பாளி.
14.வயிறு- பலா.
15. தலை--தேங்காய்.
16.உடல்--தர்பூசணி.
17.கர்ப்பபை--முலாம்பழம்.
18.மார்பு--சப்போட்டாபழம்.
19.குடல்--வெள்ளரிப்பழம்.
20.பிருஷ்ட்டப்பகுதி--அத்திப்பழம்..


புதன், 17 ஜூலை, 2019

எந்ததெய்வத்தை வணங்கினால் என்ன கிடைக்கும்.

விநாயகர்:இடையூர்களை நீக்கி வெற்றி அருள்கிடைக்கும்.
மகாசரஸ்வதி:கல்வி செல்வம் கிடைக்கும்.
மகாலெட்சுமி: செல்வம் பெருகும்.
தன்வந்திரி பகவான்: நோய் நீங்கும்.
ருத்திரன்: நீண்ட ஆயுள்.
ஆஞ்சநேயர்: சனி தோசம் நீங்கும்.
காமாட்சி அம்மன்: திருமண தடை நீங்கும்.
அன்னபூரணி:உணவு கஷ்டம் நீங்கும்.
சந்தான லெட்சுமி: புத்திர பாக்கியம் கிடைக்கும்.

செவ்வாய், 12 மார்ச், 2019

பகவான் பாபா குழந்தைகளுக்குகூறிய அறிவுரை

1.பெற்றோர்களிடம் எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும.எவ்வளவு கஷ்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.குழந்தைகள் வளருவதற்கு எவ்வளவோ தியாகம் செய்கிறார்கள்.அதனால் பெற்றோற்களை எப்போதும் சந்தோஷப்படுத்த வேண்டும்.
2.உங்களிடம் உள்ள கோபம்,பகட்டு,பொறாமை போன்ற தீய குணங்களை அறவே விட்டுவிடவேண்டும்.அன்பின் மூலம் உலகையே வெல்லலாம்.பகவான் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்.
3.எதையும் திருடக்கூடாது.புத்தகமோ,பேனாவோ தேவைபட்டால் நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஆனால் எதையும் அவர்களுக்கு தெரியாமல் எடுக்கக் கூடாது.
4.எந்த மதமானாலும் வேற்றுமை பாராட்டாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.இருப்பது ஒரே மதம்.அதுவே அன்பு மதம்.

சனி, 27 அக்டோபர், 2018

ஸ்பைடர்மேன் வரைவது பற்றிய வீடியோ

வணக்கம்.ஸ்பைடர்மேன் வரைவது பற்றிய வீடியோ .
சுலபமாக ஸ்பைடர்மேன் எப்படி வரைவது என்று எங்களது  youtube channel ல் பாருங்கள்.நன்றி.


திங்கள், 22 அக்டோபர், 2018

வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்

வணக்கம்.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7வது நட்சத்திரமாக வந்தால் அதை வதம் எனவும்,அந்த ஆண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால் அதே பெண் நட்சத்திரம்22வரும் அது வைநாசிகம்   நட்சத்திரம் என்று திருமணப் பொருத்தம்  பார்க்கும் போது சொல்வார்கள்.௨தாரணமாக பெண் நட்சத்திரம் அஸ்வினி என்றால் அதற்கு 7வது நட்சத்திரம் வதம் என்ற புனர்பூசம் நட்சத்திரமாகும்.அந்த ஆண் நட்சத்திரம் புனர்பூசத்தில் இருந்து 22வது வைநாசிகம் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் வரும்.எனவே வதவை நாசிக நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது .
வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்:
1.ரோகிணி-- பூரட்டாதி
2.பூசம் -பரணி
3.மகம்-- ரோகிணி
4.உத்திரம்-- திருவாதிரை
5.அஸ்தம்- புனர்பூசம்
6.சித்திரை-- பூசம்
7.அனுஷம் --பூரம்
8.உத்திராடம்-- சுவாதி
9.பூரட்டாதி --மூலம்
10.உத்திரட்டாதி-- பூராடம்
11.ரேவதி-- உத்திராடம்
மேலே கண்ட நட்சத்திரங்களில் ஆண்அல்லது பெண் நட்சத்திரங்கள் வந்தால் 22வது நட்சத்திரத்தில் வரும் வதவை நாசிக தோசமில்லை.
                                      நன்றி.

கரணங்களின் அதிதேவதை

வணக்கம்.கரணங்களின் அதி தேவதை
1.பவம்--  இந்திரன்.
2.பாலவம்--பிரம்மா.
3.கெளலவம்-- சூரியன்.
4.தைதுலம் --ஆதித்தியன்.
5.கரசை --பூமி.
6.வணிசை--பூமி. 
7.பத்திரை --எமன்.
8.சகுனி-- கலி. 
9.சதுஷ்பாதம்-- ருத்திரன். 
10.நாகவம் --சர்ப்பம்.
11.கிம்ஸ்துக்கினம்-- வாயு.
அவரவர் பிறந்த ஜாதகப்படி என்ன கர்ணம் என அறிந்து அதற்குண்டான தேவதையை தெரிந்து கொண்டு ஜன்ம நட்சத்திரத்தன்று  வழிபாடு செய்யவும்.
                                                           நன்றி.


எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...