வியாழன், 4 அக்டோபர், 2018

குருப் பெயர்ச்சி

வணக்கம்.
நிகழும் விளம்பி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி ((04.10.2018)வியாழக்கிழமை அன்று இரவு 10.05 p.m மணி அளவில் ஆயில்யம் நட்சத்திரமும் ,ஏகாதசி திதியும் கூடிய நாளில் விசாகம் நட்சத்திரம் 3ஆம் பாதம் துலாம் ராசியில் இருந்து குரு பகவான் பெயர்ச்சி ஆகி விசாகம் நட்சத்திரம் 4ஆம் பாதம் விருச்சிக ராசிக்கு வர இருக்கிறார்.
ஆங்கிரீஷ மகரிஷி குலத்தில் அவதரித்த குரு பகவான் சாந்தமான குணத்திற்கு சொந்தக்காரர்.குரு பகவானின் பார்வைகள் 5,7,9
குரு பகவானின் பார்வையைப் பெறும் ராசிகள் மீனம், ரிஷபம், கடகம்.
இந்த குருப் பெயர்ச்சியில் சிறப்பான பலன்களை அடையும் ராசிகள்:
மீனம், ரிஷபம், கடகம், துலாம்,மகரம்.
தன ஸ்தானமான 2ஆம் வீட்டை குரு பகவான் பார்க்கும் ராசிகள்:
மேஷம்,மிதுனம் ,கும்பம்.
பரிகாரம் செய்து பலன் அடையும் ராசிகள்:
சிம்மம், கன்னி ,விருச்சிகம்,தனுசு.
குரு பெயர்ச்சி இன்று நடைபெறுவதால் குரு பகவான் மற்றும் தட்சிணாமுரத்திக்கு முல்லை மலர் அல்லது மஞ்சள் செவந்தியப்பூ மாலை சாற்றி தாமரை தண்டு திரி போட்டு, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
பரிகாரம் செய்ய வேண்டிய  சிம்மம், கன்னி, விருச்சிகம் ,தனுசு ராசியை சேர்ந்த வர்கள் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலைக்கு சென்று முருகனை வணங்கிவரவும்.சிறப்பான பலன்கள் நடை பெறும்.
நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...