வணக்கம்.நவராத்திரி காலத்தில் குமாரி பூஜை முக்கிய இடம் வகிக்கிறது.இதற்கு பத்து வயதுக்குட்பட்ட குமாரிகள் பூஜைக்கு உரியவர்கள்.புரட்டாசி மாதம் சுக்கில பட்சம் பிரதமை திதி முதல் தொடங்கி நவமி திதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி,திருமூர்த்தி,கல்யாணி ,ரோகிணி,காளி,சாண்டிகா,,சாம்பவி,துர்கா,சுபத்திரா என்ற பெயர்களால் வணங்க வேண்டும்.தெய்வங்களாக வணங்கும் குமாரிகள் நோயற்றவர்களாகவும்,அழகு உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.குமாரிகளுக்கு ஆடைஆபரணங்கள்,பழங்கள்,தாம்பூலம்,மலர், சீப்பு,கண்ணாடி,மஞ்சள்,குங்குமம்,தட்சணை போன்றவை கொடுத்து உபச்சாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு குமாரிகளை உபசரிக்கும் போது கிரியா, இச்சா ஞான சக்திகளை வழங்கும் நவராத்திரி அன்னையர்களான துர்கா பரமேஸ்வரி,மஹா லட்சுமி,மஹா சரஸ்வதியின் அருளைப் பெறலாம்.
நன்றி!
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக