ஞாயிறு, 7 அக்டோபர், 2018

மகாளயபட்ச அமாவாசை

வணக்கம்.
மகாளயபட்ச அமாவாசை புரட்டாசி மாதம் 22ஆம் தேதி (08.10.2018)திங்கள் கிழமை காலை 11மணி 33 நிமிடத்திற்கு (11.33 am)பிறகு ஆரம்பமாகிறது.
மகாளயபட்சம்  என்பது புரட்டாசி மாதம் பெளர்ணமி திதிக்கு மறுநாள் பிரதமை திதியில் இருந்து புரட்டாசி மாதம் அமாவாசை வரை உள்ள 15 நாட்களாகும். மறைந்த நம் முன்னோர்கள்  மகாளயபட்சமான 15 நாட்களும் நம் இல்லத்திற்கு வரும் காலமாகும்.முன்னோர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் வரும் மகாளயபட்ச அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.புனித நீர் நிறைந்த கடலுக்கு  சென்று புனித நீராடி ,நம்முன்னோர்கள் ஆத்மா சாந்திக்காக பிராத்தனை செய்யவேண்டும்.காசி,ராமேஸ்வரம் ,திருப்புலாணி,சேதுகரை சென்று கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்யலாம்.
தர்பணம் ,தான தர்மங்கள் செய்யலாம்.தர்பணம் செய்வதால் முன்னோற்களால் ஏற்ப்பட்ட சாபம் நீங்கும்.முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் மகாளய பட்ச அமாவாசை அன்று திதி கொடுக்கலாம்.எதிர் காலத்தில் நம் தலைமுறைக ளுக்கு   ,முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்கு மகாளய பட்ச அமாவாசையை  பயன்படுத்தி முன்னோரகளின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி!
              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...