செவ்வாய், 12 மார்ச், 2019

பகவான் பாபா குழந்தைகளுக்குகூறிய அறிவுரை

1.பெற்றோர்களிடம் எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும.எவ்வளவு கஷ்டத்தில் குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.குழந்தைகள் வளருவதற்கு எவ்வளவோ தியாகம் செய்கிறார்கள்.அதனால் பெற்றோற்களை எப்போதும் சந்தோஷப்படுத்த வேண்டும்.
2.உங்களிடம் உள்ள கோபம்,பகட்டு,பொறாமை போன்ற தீய குணங்களை அறவே விட்டுவிடவேண்டும்.அன்பின் மூலம் உலகையே வெல்லலாம்.பகவான் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்.
3.எதையும் திருடக்கூடாது.புத்தகமோ,பேனாவோ தேவைபட்டால் நண்பர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஆனால் எதையும் அவர்களுக்கு தெரியாமல் எடுக்கக் கூடாது.
4.எந்த மதமானாலும் வேற்றுமை பாராட்டாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.இருப்பது ஒரே மதம்.அதுவே அன்பு மதம்.

சனி, 27 அக்டோபர், 2018

ஸ்பைடர்மேன் வரைவது பற்றிய வீடியோ

வணக்கம்.ஸ்பைடர்மேன் வரைவது பற்றிய வீடியோ .
சுலபமாக ஸ்பைடர்மேன் எப்படி வரைவது என்று எங்களது  youtube channel ல் பாருங்கள்.நன்றி.


திங்கள், 22 அக்டோபர், 2018

வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்

வணக்கம்.
பெண் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் 7வது நட்சத்திரமாக வந்தால் அதை வதம் எனவும்,அந்த ஆண் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால் அதே பெண் நட்சத்திரம்22வரும் அது வைநாசிகம்   நட்சத்திரம் என்று திருமணப் பொருத்தம்  பார்க்கும் போது சொல்வார்கள்.௨தாரணமாக பெண் நட்சத்திரம் அஸ்வினி என்றால் அதற்கு 7வது நட்சத்திரம் வதம் என்ற புனர்பூசம் நட்சத்திரமாகும்.அந்த ஆண் நட்சத்திரம் புனர்பூசத்தில் இருந்து 22வது வைநாசிகம் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரம் வரும்.எனவே வதவை நாசிக நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது .
வதவை நாசிக சிறப்பு நட்சத்திரங்கள்:
1.ரோகிணி-- பூரட்டாதி
2.பூசம் -பரணி
3.மகம்-- ரோகிணி
4.உத்திரம்-- திருவாதிரை
5.அஸ்தம்- புனர்பூசம்
6.சித்திரை-- பூசம்
7.அனுஷம் --பூரம்
8.உத்திராடம்-- சுவாதி
9.பூரட்டாதி --மூலம்
10.உத்திரட்டாதி-- பூராடம்
11.ரேவதி-- உத்திராடம்
மேலே கண்ட நட்சத்திரங்களில் ஆண்அல்லது பெண் நட்சத்திரங்கள் வந்தால் 22வது நட்சத்திரத்தில் வரும் வதவை நாசிக தோசமில்லை.
                                      நன்றி.

கரணங்களின் அதிதேவதை

வணக்கம்.கரணங்களின் அதி தேவதை
1.பவம்--  இந்திரன்.
2.பாலவம்--பிரம்மா.
3.கெளலவம்-- சூரியன்.
4.தைதுலம் --ஆதித்தியன்.
5.கரசை --பூமி.
6.வணிசை--பூமி. 
7.பத்திரை --எமன்.
8.சகுனி-- கலி. 
9.சதுஷ்பாதம்-- ருத்திரன். 
10.நாகவம் --சர்ப்பம்.
11.கிம்ஸ்துக்கினம்-- வாயு.
அவரவர் பிறந்த ஜாதகப்படி என்ன கர்ணம் என அறிந்து அதற்குண்டான தேவதையை தெரிந்து கொண்டு ஜன்ம நட்சத்திரத்தன்று  வழிபாடு செய்யவும்.
                                                           நன்றி.


வெள்ளி, 19 அக்டோபர், 2018

தேய்பிறை திதிகளின் அதி தேவதைகள்

வணக்கம்.தேய்பிறை திதிகளின் அதி தேவதைகள்.
1.பிரதமை திதி --குபேரன்.
2.துவிதியை திதி --வாயு.
3.திருதியை திதி --அக்னி.
4.சதுர்த்தி திதி-- அசுரர்.
5.பஞ்சமி திதி --தேவன்.
6.சஷ்டி திதி --செவ்வாய் பகவான்.
7.சப்தமி திதி --முனிவர்.
8.அஷ்டமி திதி --ஆதிசேஷன்.
9.நவமி திதி --எமன்.
10.தசமி திதி --குரு பகவான்.
11.ஏகாதசி திதி --சுக்கிர பகவான்.
12.துவாதசி திதி --சுக்கிர பகவான்.
13.திரயோதசி திதி --நந்தீஸ்வரர்.
14.சதுர்த்தசி திதி --மகேஷவரன்.
15.அமாவாசை திதி--சதாசிவன்.
தேய்பிறை திதியில் ஒருவர் பிறந்திருந்தால்  அந்த திதி யின் அதி தேவதை யார் என பார்த்து அந்த தெய்வத்தை தேய்பிறை திதியில் வணங்கும் போது நன்மை உண்டாகும்.உதாரணமாக ஒருவர் தேய்பிறை சஷ்டி திதியில் பிறந்திருந்தால் அவர் தேய்பிறை காலத்தில் வரும் சஷ்டி திதியில் செவ்வாய் பகவானை வணங்கும் போது பிரச்சினை காண தீர்வு கிடைக்கும்.
                     நன்றி.

வளர்பிறை திதிகளின் அதி தேவதைகள்

வணக்கம்.வளர்பிறை திதிகளின் அதி தேவதைகள்.
1.பிரதமை திதி --துர்க்கை.
2.துவிதியை திதி --விஷ்வகர்மா.
3.திருதியை திதி --சந்திரன்.
4.சதுர்த்தி திதி --விநாயகர்.
5.பஞ்சமி திதி --தேவேந்திரன்.
6.சஷ்டி திதி --முருகன்.
7.சப்தமி திதி --சூரியன்.
8.அஷ்டமி திதி --லட்சுமி.
9.நவமி திதி --சரஸ்வதி.
10.தசமி திதி --வீரபத்திரன்.
11.ஏகாதசி திதி --பார்வதி.
12.துவாதசி திதி-- விஷ்ணு.
13.திரயோதசி திதி --பிரம்மா.
14.சதுர்த்தசி திதி --சிவன்.
15.பெளர்ணமி திதி-- வருணன்.
நமக்கு பிரச்சினைகள் வரும் போது நமது பிறந்த திதி அதி தேவதை என்ன என்று பார்த்து அந்த அதி தேவதையை வணங்கும் போது பிரச்சினையில் இருந்து நிவர்த்தி பெறலாம்.உதாரணமாக ஒருவர் வளர்பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால் அவர் வணங்க வேண்டிய தெய்வம் விநாயகர்.வளர்பிறை சதுர்த்தி திதியில் பிறந்திருந்தால் வளர்பிறை காலத்தில் வரும் சதுர்த்தி திதியில் மட்டும் விநாயகரை வணங்கும் போது பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கும்.
                      நன்றி.

புதன், 17 அக்டோபர், 2018

ஐயப்பன் கோயில் 18படிகளில் வாசம் செய்யும் தெய்வங்கள் மற்றும் கிரகங்கள்

வணக்கம்.
ஒன்றாம் திருப்படி --சூரிய பகவான்.
இரண்டாம் திருப்படி --சிவன்.
மூன்றாம் திருப்படி-- சந்திர பகவான்.
நான்காம் திருப்படி --பராசக்தி
ஐந்தாம் திருப்படி-- செவ்வாய் பகவான்.
ஆறாம் திருப்படி -- முருகன்.
ஏழாம் திருப்படி --புதன் பகவான்.
எட்டாம் திருப்படி --விஷ்ணு.
ஒன்பதாம் திருப்படி --குரு பகவான்.
பத்தாம் திருப்படி --பிரம்மா.
பதினோராம் திருப்படி --சுக்கிர  பகவான்.
பனிரெண்டாம் திருப்படி-- லட்சுமி.
பதிமூன்றாம் திருப்படி --சனி பகவான்.
பதினான்காம் திருப்படி --எம தர்மராஜன்.
பதினைந்தாம் திருப்படி-- ராகு பகவான்.
பதினாராம் திருப்படி --சரஸ்வதி .
பதினேழாம் திருப்படி --கேது பகவான்.
பதினெட்டாம் திருப்படி --விநாயகர்.
1,3,5,7,9,11,13,15,17ஒற்றைப்படை வரிசை படிகளில் நவக்கிரகங்களும் 2,4,6,8,10,12,14,16,18இரட்டைப்படை வரிசை படிகளில் தெய்வங்களும் இருந்து
ஐயப்ப பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்கள்.
                                நன்றி.

வெள்ளி, 12 அக்டோபர், 2018

வாணியை சரணடைவோம்

வணக்கம்.வாணியை சரணடைவோம்.
கல்வி செல்வத்திற்கு அதிபதியான சரஸ்வதி தேவி, வாக்கு சித்தி தரும் வாணி,கலைமகள்,பிரம்மாவின்  பத்தினி ,கலையரசி,வாக்கீஸ்வரி என்ற பல திரு நாமங்களைகொண்டவள் அன்னை கலை வாணி .
சரஸ்வதி காயத்ரி
ஓம் வீணா வாத் யாயை வித்மஹே ஞானதீபாயை தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்.
காலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை கொடுக்கும் அன்னை சரஸ்வதியை வளர்பிறை சப்தமி திதி முதல் நவமி திதி வரை உள்ள காலத்தில் காயத்திரி மந்திரம் சொல்லி வாணியை சரணடைந்து அன்னையின் அருளைப் பெருவோம்.நன்றி.

வியாழன், 11 அக்டோபர், 2018

முப்பெரும் தேவியரின் அம்சம்.

வணக்கம்.முப்பெரும் தேவியரின் அம்சம்.
பிரதமை திதி முதல் திருதியை திதி வரை துர்கையின் ஆட்சி காலம்.
சதுர்த்தி திதி முதல் சஷ்டி திதி வரை லட்சுமியின் ஆட்சி காலம்.
சப்தமி திதி முதல் நவமி திதி வரை சரஸ்வதியின் ஆட்சி காலம்.
துர்க்கையின் மூன்று அம்சங்கள்.
1.மகேஷ்வரி
2.கெளமாரி
3.வராகி
லட்சுமி யின் மூன்று அம்சங்கள்
1.மஹா லட்சுமி
2.வைஷ்ணவி
3.இந்திராணி
சரஸ்வதியின் மூன்று அம்சங்கள்
1.சரஸ்வதி
2.நராசிம்மி
3.சாமூண்டி
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் அன்னையான முப்பெரும் தேவியர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் உருவங்களை மாற்றி  பண்டாசுரனை வதம் செய்வதற்காக போராடினார்கள் . பத்தாம் நாள் தசமி திதியில் அசுரனை வதை செய்த வெற்றி தினத்ததை விஜய தசமி யாக கொண்டாடுகிறோம்.

செவ்வாய், 9 அக்டோபர், 2018

கொலு பொம்மைகள்

வணக்கம்.
கொலு  பொம்மைகள்.
நவராத்திரியில்  முக்கிய அம்சம் கொலு பொம்மைகள் வைப்பதாகும்.கொலுப் படிகள் 3,5,7,9,11என்ற எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.கொலுவில் உள்ள பொம்மைகள் மண்ணினால்  செய்யப்பட்டிருந்தால் சிறப்பானதாகும்.
கொலு பொம்மைகளை எப்படி  கொலு படிகளில்  அமைக்க வேண்டும் என்பதனைபற்றி பார்ப்போம்.
முதல் படியில்:ஓர் அறிவு உபிர்களான புல்,செடி,கொடி ,தாவர வகை பொம்மைகள்.
இரண்டாவது படியில்:ஈரறிவு உபிர்களான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாவது படியில்:   மூன்றறிவு  உபிர்களான கரையான்,எறும்பு போன்ற  பொம்மைகள்.
நான்காவது படியில்: நான்கு அறிவு உபிர்களான நண்டு,வண்டு போன்ற பொம்மைகள்.
ஐந்தாவது படியில்:ஐந்து அறிவு உபிர்களான விலங்குகள்,பறவைகள் போன்ற பொம்மைகள்.
அறிவது படியில்:ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள்.
ஏழாவது படியில்:மனித நிலையில் இருந்து உயர்ந்த மகான்கள்,மகரிஷிகள் போன்றவர்களின் பொம்மைகள்.
எட்டாவது படியில்:அஷ்டதிக் பாலகர்கள்,தேவதைகள்,நவக்கிரகங்கள்,துர்கா, லட்சுமி, சரஸ்வதி போன்ற பொம்மைகள்.
ஒன்பதாவது படியில்:பிரம்மா, விஷ்ணு, சிவன்ஆகிபோர்கள் தேவியர்களுடன் இணைந்து உள்ள பொம்மைகள் வைத்து அவற்றின் நடுவில் ஆதிபராசக்தியின் பொம்மைகள் வைக்கவேண்டும்.கொலு வைத்து அன்னை யின் அருளைப் பெறுவோம்.நன்றி.

திங்கள், 8 அக்டோபர், 2018

கிரியா,இச்சா, ஞான சக்தி கொடுக்கும் தெய்வங்கள் படம்

வணக்கம்.1. மூன்று சக்திகள் பெற்று அரக்கனை அழித்த அன்னை.
2.கிரியா சக்தி: துர்கா பரமேஸ்வரி.
3. இச்சா சக்தி: மஹா லட்சுமி .
4. ஞான சக்தி: மஹா சரஸ்வதி.




எந்த நட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும்

 ஒவ்வொரு மாதமும் எந்தநட்சத்திரத்தில் பெளர்ணமி ஏற்படும் என்பதைப் பார்ப்போம். தமிழ் மாதங்கள் நட்சத்திரப் பாதங்கள் 1- சித்திரை - சித்திரை 4 ஆம்...